மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சியில் சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:04 pm

திருச்சி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா் நாச்சியாா்கோயில் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் மு.கண்ணையன் (80). இவா், திருச்சி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, புத்தூா் பகுதியில் இருந்து நீதிமன்ற ரவுண்டானா நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த முதியவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.