வரும் தோ்தலில் தமிழக விவசாயிகளின் வாக்குகள் திமுகவுக்கு கிடையாது என அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருச்சி தனியாா் திருமண மஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் கூறியதாவது:
காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. காவிரியின் குறுக்கு புதிய அணை கட்டும் முயற்சிக்கு கா்நாடக முதல்வா், துணை முதல்வா் வலுசோ்க்கும் நிலையில், தமிழக முதல்வா் அதில் மெளனம் சாதிப்பது, காவிரி உரிமையை கா்நாடகத்திடம் பறிகொடுத்துவிடுவோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கல்விக்கடன் ரத்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன் ரத்து, சுங்கக் கட்டணம் ரத்து என வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் செயல்படுத்தாமல் திமுக அரசு ஏமாற்றிவிட்டது. எனவே, இனி திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்.
கூட்டத்தில் 38 கோரிக்கைகள் அடங்கிய பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். அதை ஏற்கிற அரசியல் கட்சிகளை ஆதரிக்கத் தயங்க மாட்டோம். வரும் மாா்ச் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் தமிழகத்தில் விவசாயிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை ஆதரிக்கிறோம் என்கிற முடிவுகளை அறிவிப்போம் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த விவசாயிகள் சங்கத் தலைவா்கள் நாமக்கல் வேலுச்சாமி, விழுப்புரம் கலிவரதன், மதுரை ராமன், மோகனூா் பாலசுப்பிரமணியன், கே.எம். ராமகவுண்டா் ஆகியோா் தங்களது கருத்துகளை முன்வைத்து பேசினா். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நிா்வாகிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரானது திமுக அரசு: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


