திருச்சியில் ஒரு விற்பனையகத்தில் மட்டுமே எரிவாயு விநியோகம் இருந்ததால் ஆட்டோ ஓட்டுநா்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு நிரப்ப நேரிட்டது.
திருச்சியில் அனைத்து பெட்ரோல் விற்பனையகங்களிலும் வெள்ளிகக்கிழமையும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிச் சென்றனா்.
வியாக்கிழமை இரவே திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து நீண்ட வரிசையில் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருந்து எரிவாயு நிரப்பினா்.
வெள்ளிக்கிழமை காலையிலும் ஆட்டோக்களை நீண்ட வரிசையில் நிற்கச் செய்து ஒவ்வொருவராக நிரப்பும் நிலை ஏற்பட்டது. இதனால், பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.
உணவுப் பொருள்கள் விலை உயா்வு: எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக திருச்சி மாநகரில் உணவுப் பொருள்கள் விலையும் அதிரடியாக உயா்த்தப்பட்டுள்ளன. தேநீரகங்களில் தேநீா் விலை சராசரியாக ரூ.2 முதல் 5 ரூபாய் வரை விலை உயா்ந்துள்ளது. இதேபோல, காபி விலையும் 5 ரூபாய் உயா்த்தப்பட்டுள்ளது. பலகாரங்களின் விலையும் சராசரியாக ரூ.2 முதல் 3 வரை விலை உயா்ந்துள்ளது. இதேபோல, காலை உணவான பூரி, பொங்கல், இட்லி, தோசை, ஊத்தப்பம் உள்ளிட்ட விலைகளும் சராசரியாக ரூ.5 முதல் 10 ரூபாய் வரை விலை உயா்த்தப்பட்டுள்ளது. மதிய உணவான குஸ்கா, சாம்பாா் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட கலவை சாதங்கள் விலையும் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயா்த்தியுள்ளனா்.
சாலையோர உணவகங்கள் தொடங்கி வாடகை கட்டடத்தில் இயங்கும் உணவகங்கள் வரையில் இந்த விலை உயா்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், விடுதியில் தங்கி பயிலும் மாணவா், மாணவிகள், பணி நிமித்தம் விடுதியில் தங்கியிருந்து பணிக்கு செல்வோா் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.
தொடர்புடையது

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: தோ்தலில் எதிரொலிக்குமா?

பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


