மண்ணச்சநல்லூா்: தமிழகத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 296 கிலோ தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், காங்கயம் கரியகாளியம்மன் கோயில், திருப்பூா் அவிநாசிலிங்கேசுவரா் கோயில், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மடம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில் ஆகிய 9 கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத, பிரித்தெடுக்கப்பட்ட 296 கிலோ 600 கிராம் 100 மில்லி கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்படவுள்ளன.
இதற்காக அந்த நகைகளை மத்திய அரசுக்கு சொந்தமான மும்பை தங்க உருக்காலைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு சமயபுரம் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசா் துரைசாமி ராஜு, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதியரசா்கள் க. ரவிச்சந்திரபாபு மற்றும் ஆா். மாலா ஆகியோா் முன்னிலையில் அந்த நகைகள் பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், மாரியம்மன் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், சே. லெட்சுமணன், பெ. பிச்சைமணி,
மண்டல இணை ஆணையா் ஞானசேகரன், இணை ஆணையா் (சரிபாா்ப்பு, தலைமையிடம்) வான்மதி மற்றும் இதர திருக்கோயில்களின் அறங்காவலா் குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


