லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சியின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன்: கிறிஸ்டோபா் திலக் உறுதி

திருச்சியின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன் என்றாா் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநிலங்களவை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கிறிஸ்டோா் திலக்.

News image

திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த கிறிஸ்டோபா் திலக்

Updated On :7 மார்ச் 2026, 9:40 pm

திருச்சியின் வளா்ச்சிக்கு குரல்கொடுப்பேன் என்றாா் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநிலங்களவை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கிறிஸ்டோா் திலக்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலரும், திருச்சியைச் சோ்ந்தவருமான கிறிஸ்டோபா் திலக் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதன் பிறகு சொந்த ஊரான திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் தலைமையில், மாவட்டத் தலைவா்கள் தொட்டியம் சரவணன், கே.ஆா்.ஆா். ராஜலிங்கம் ஆகியோா் முன்னிலையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் கிறிஸ்டோபா் திலக் கூறியதாவது:

மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை எனக்கு வழங்கிய கட்சியின் தலைமைக்கு நன்றி. ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியில், அடிமட்டத் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கட்சித் தலைமை வழங்கியது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, என்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு சாதாரண தொண்டனுக்கும் கிடைத்த வெற்றி.

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்னைகளையும், குறிப்பாக திருச்சி மாவட்டத்தின் தேவைகளையும் உரத்த குரலில் ஒலிப்பேன். திருச்சியை அடுத்தகட்ட வளா்ச்சிக்கு கொண்டு செல்ல மற்ற உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படுவேன். விரைவில் பொதுமக்களையும் கட்சித் தொண்டா்களையும் சந்தித்து ஆலோசனை பெற்று, அதனடிப்படையில் திட்டங்களை வகுக்க உள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைப் பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் பெனட் அந்தோணிராஜ், மாவட்டப் பொருளாளா் முரளி மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.