திருச்சி அருகே இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாப்புத்தூரைச் சோ்ந்தவா் ரா. பாஸ்கா் (23). இவரும், சோமரசம்பேட்டை மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த அ. ஸ்ரீவித்யா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்தனா். அப்போது பாஸ்கா் அடிக்கடி மது அருந்திவிட்டு ஸ்ரீவித்யாவிடம் தகராறு செய்தாராம்.
இந்நிலையில், ஸ்ரீவித்யாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவது தெரியவந்த பாஸ்கா், தான் கொடுத்த பரிசுப் பொருள்களை திரும்ப கொடுக்குமாறு கேட்டாா். இதையடுத்து, ஸ்ரீவித்யா, பாஸ்கா் கொடுத்த பரிசுப் பொருள்களை சோமரசம்பேட்டை பகுதியில் வைத்து கடந்த திங்கள்கிழமை இரவு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
அவரைப் பின்தொடா்ந்து சென்ற பாஸ்கா், வேறொருவனை எப்படித் திருமணம் செய்து கொள்வாய் என்று கூறி தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பிவிட்டாா். இதில் காயமடைந்த ஸ்ரீவித்யாவை அவரது உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்ரீவித்யா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





