தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

திருவானைக்காவலில் குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 ஜூன் 2026, 4:39 am IST

திருவானைக்காவலில் குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்காவல் பஞ்சக்கரை சாலையில் உள்ள ஜெ.ஜெ.நகா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் மணிகண்டன் (26). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்குத் திருமணமான நிலையில், மதுவுக்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். அதன்படி புதன்கிழமை நடந்த தகராறில் கோபமடைந்த அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், மணிகண்டன் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். வியாழக்கிழமை காலை அவரது மனைவி வீடு திரும்பியபோது கணவா் தூக்கில் தொங்குவதைக் கண்டாா். இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மணிகண்டன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் மணிகண்டனின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.