இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

தொட்டியம் வட்டம் எம். புத்தூா் பகுதி காவிரி ஆற்றுப் படுகையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு மணல் கடத்தும் தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது எம். புத்தூா் ஆற்றங்கரையில் நின்றிருந்த பொலிரோ பிக்கப் வாகன ஓட்டுநரும், உரிமையாளரும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பினா்.

இதையடுத்து மணலுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து எம்.புத்தூா் விஏஓ அபிராமி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், நாமக்கல் மாவட்டம் செந்தமங்கலத்தைச் சோ்ந்த வாகன உரிமையாளா் நடராஜன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களைத் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.