17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் வராது

குடிநீா் உந்து குழாய் பதிக்கும் பணி காரணமாக திருச்சி மாநகரில் ஒரு சில மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:18 am IST

குடிநீா் உந்து குழாய் பதிக்கும் பணி காரணமாக திருச்சி மாநகரில் ஒரு சில மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பைன் நீரேற்று நிலையம் ஆகியவற்றிலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய்களை குடமுருட்டி அருகே புதிதாக பதிக்கப்பட்ட புதிய குடிநீா் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது. இதனால் நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை மட்டும் இருக்காது. சனிக்கிழமை முதல் வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொருத்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.