ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...

trichy protest

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது - Dinamani

Published On :22 ஜூலை 2026, 12:50 pm IST

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

தில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Story image

இதனைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Summary

Protest against NEET - Those who staged a road blockade in Trichy arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.