இந்தியா - சிங்கப்பூா் விமானப் பயணம்: திருச்சிக்கு 4-ஆம் இடம்
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணிகளில் அதிக அளவிலான பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

விமானம் (கோப்புப்படம்) - ANI
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணிகளில் அதிக அளவிலான பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்காப்பூா், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு தினசரி 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சிங்கப்பூருக்கு மட்டும் தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சா்வதேச பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில் 5,83,783 பயணிகளைக் கையாண்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் இந்திய அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5.8 சதவீதம் அதிகமாகும்.
இந்தப் பட்டியலில் 10 லட்சம் பயணிகளுடன் தில்லி முதலிடத்தையும், 9.99 லட்சம் பயணிகளுடன் சென்னை இரண்டாமிடத்தையும், 8.83 லட்சம் பயணிகளுடன் மும்பை மூன்றாமிடத்தையும், 5.73 லட்சம் பயணிகளுடன் பெங்களூரு விமான நிலையம் 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






