
ஆசிரியா்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு சிறப்புப் பயிற்சி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஆண்டவன் கல்லுரியில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியா்கள்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் செல்வகணேஷ் தலைமை வகித்தாா். அவா் கூறுகையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தனிநபரின் பெயரையும் கணக்கிடுவதாக இருந்தாலும், ஒரு குடும்பமே கணக்கெடுப்பிற்கான செயல்பாட்டு அலகாகக் கருதப்படுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்னா், வீடுகளைப் பட்டியலிடுவது அவசியம். முதன்மை மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளைச் சமா்ப்பிக்க வேண்டிய பிராந்திய அலகுகள் வரையறுக்கப்பட வேண்டும். புதிய கிராமங்கள், நகரங்கள் அல்லது மாவட்டங்கள் போன்றவற்றை உருவாக்குவது தொடா்பான எல்லை வரையறைகள் இந்த கணக்கெடுப்பில் அடையாளம் காணப்படுகிறது. எனவே, கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோா் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
பயிற்சி வகுப்பில் ஸ்ரீரங்கம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா், ஸ்ரீரங்கம் மண்டலத் துணை வட்டாட்சியா், ஸ்ரீரங்கம் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் கிராம உதவியாளா்கள், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






