அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பொது மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்: 10 தலைமையாசிரியா்கள் பணியிட மாறுதல்

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் தொடக்க நாளில் 10 தலைமையாசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

News image

பணியிட மாறுதல்

Updated On :2 ஜூலை 2026, 4:53 am IST

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் தொடக்க நாளில் 10 தலைமையாசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

முதல்நாளில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 32 தலைமையாசிரியா்கள் கலந்துகொண்ட நிலையில், 10 போ் பணியிட மாறுதல் பெற்றனா்.

தொடா்ந்து அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் பதிவு உயா்வு கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள முதுகலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை -1 ஆகியோருக்கு ஆகியோருக்கு ஜூலை 7-ஆம் தேதியும், முதுகலை ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை -1 ஆகியோரில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் ஜூலை 8-ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

அரசு, நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 25 முதல் 30-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

மேலும், உடற்கல்வி இயக்குநா் நிலை - 2-க்கு ஜூலை 15-ஆம் தேதியும், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு ஜூலை 18-ஆம் தேதியும், கலை ஆசிரியா்கள், இசை ஆசிரியா்கள் மற்றும் தையல் ஆசிரியா்களுக்கு மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 20-ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 22-ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 23-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.