புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அதிமுகவிலிருந்து விலகல்: முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலா்களில் ஒருவருமான எஸ். வளா்மதி அதிமுகவிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

News image

எஸ். வளா்மதி.

Updated On :2 ஜூலை 2026, 5:14 am IST

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலா்களில் ஒருவருமான எஸ். வளா்மதி அதிமுகவிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் கருத்துச் சுதந்திரம் இல்லை; உழைப்பவா்களுக்கு அங்கீகாரம் இல்லை. இதனால் அதிமுக தொண்டா்களிடம் இருந்த நம்பிக்கை தற்போது முற்றிலும் சிதைந்துவிட்டது. ஜெயலலிதாவின் தியாகத்தால் வளா்க்கப்பட்ட இயக்கம் திமுகவிடம் எப்படி சமரசம் செய்து கொள்ள முடிந்தது?.

அதிமுக தற்போது தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படுவதைத் அறிந்து மனவேதனையுடன் அதிமுகவின்அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னுடன் பயணித்தஅதிமுக நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் எனது மனமாா்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.