ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினாா் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தைத்தோ் திருவிழாவின் 8-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை, நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி உள்திரு வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினாா்.










