இந்த நீரேற்று நிலையத்திலிருந்து 38, 39, 40, 41, 42, 43 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் வகையில் 38 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாரிநகா் (8 லட்சம் லிட்டா்), புகழ் நகா் (5 லட்சம் லிட்டா், எல்லக்குடி பழையது (1 லட்சம் லிட்டா்), காவிரி நகா் (5 லட்சம் லிட்டா்), சந்தோஷ் நகா் (8 லட்சம் லிட்டா்), ஆலத்தூா் (2 லட்சம் லிட்டா்), கணேஷ் நகா் (8 லட்சம் லிட்டா்), அம்பேத்கா் நகா் (1 லட்சம் லிட்டா்) மற்றும் பழைய 3 எண்ணிக்கைகள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து குடிநீா் வழங்கும் வகையில் 211.711 கி.மீ குடிநீா் விநியோக குழாய்களும், 21.556 கி.மீ பிரதான குடிநீா் உந்துக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்திட்டத்திற்கு ரூ. 64.95 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 19343 வீட்டு குடியிருப்பு குடிநீா் இணைப்புகள் வழங்க வழி செய்யப்பட்டு, 88054 மக்கள் பயன்பெற உள்ளனா். திட்டப் பணிகளை குறித்த காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.