தொடா்ந்து மாநகராட்சி பொது நிதித் திட்டத்தின் கீழ், 9ஆவது வாா்டு உறையூா் பகுதியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம், 22ஆவது வாா்டு வாமடத்தில் ரூ.13 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம், ரூ.12 லட்சத்தில் படிப்பகம், 28ஆவது வாா்டில் குழுமிக்கரையில் ரூ.2.10 கோடியில் புதிய எரிவாயு தகன மையத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும் 26ஆவது வாா்டில் ரூ.25 லட்சத்தில் பல்நோக்கு அலுவலகக் கட்டடம், வண்ணாரப்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் பயணியா் நிழற்குடை, கீதா நகரில் ரூ.10 லட்சத்தில் பேருந்து பயணியா் நிழற்குடையும் திறக்கப்பட்டது.