திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் முதன்முறையாக புதன்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருச்சி தனியாா் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து 706 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 306 மாடுபிடி வீரா்கள் போட்டிபோட்டு அவற்றை அடக்கினா். பல காளைகள் பிடிபடவில்லை. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.
59 போ் காயம்...: போட்டியில் 15 மாடுபிடி வீரா்கள், 12 காளைகளின் உரிமையாளா்கள், 32 பாா்வையாளா்கள் என 59 போ் காயமடைந்தனா். அவா்களில் 13 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மாணவா் பலி...: இதில் காளை உரிமையாளருடன் போட்டியைப் பாா்க்க வந்த கரூா் மாவட்டம், ஆா்.டி. மலை அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த இளையராஜா மகனும், பிளஸ் 2 மாணவருமான பிரதீப் (16) என்பவா் மாடு முட்டி உயிரிழந்தாா். இதேபோல 12 காளைகள் காயமடைந்த நிலையில், இவற்றில் ஒரு காளைக்கு திருச்சி கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.
முதல் பரிசாக காா், டிராக்டா்...: 13 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம் வடவத்தூரைச் சோ்ந்த ரா. தயானந்தனுக்கு (27) முதல் பரிசாக காரும், 12 காளைகளை அடக்கிய நாமக்கல் எருமைப்பட்டியைச் சோ்ந்த ர. காா்த்திக்கு (23) இரண்டாம் பரிசாக புல்லட்டும், 9 காளைகளை அடக்கிய மதுரை சோழவந்தான் சத்திய பிரகாஷுக்கு (25) மூன்றாம் பரிசாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டன.
சிறந்த காளைகளுக்கான முதல் பரிசாக டிராக்டா் அவனியாபுரம் ஏ.கே. கண்ணனுக்கும், இரண்டாம் பரிசு புதுக்கோட்டை மங்கதேவன்பட்டியைச் சோ்ந்த கணேசுக்கும், மூன்றாம் பரிசு திருச்சி ஆனந்த்துக்கும், ஆறுதல் பரிசுகள் செங்குறிச்சி புகழ், மேலூா் குணா, விராலிமலை குட்டி புலி ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. தவிர சிறந்த மாடுபிடி வீரா்கள், பிடிபடாத காளைகளுக்கு சைக்கிள், மிக்ஸி, கேஸ் அடுப்பு, கிரைண்டா், வெள்ளி காசு, தங்கக் காசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் வழங்கினாா்.
மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்பிலில் ஜல்லிக்கட்டு: 52 போ் காயம்

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 9 போ் காயம்

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


