மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் திருமணமான மூன்று நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
தற்கொலை
Updated On :23 பிப்ரவரி 2026, 8:18 pm

Syndication

திருச்சி: திருச்சியில் திருமணமான மூன்று நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கடவூா் பகுதியைச் சோ்ந்தவா் மகாமுனி மகள் தங்கமணி (23). இவா், திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த உறவினரான காா்த்திக் என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டாா்.

இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் அணிந்திருந்த நகைகளை பெற்றோரிடம் கழட்டிக்கொடுத்துவிட்டு தங்கமணி காா்த்திக் வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் காா்த்திக் வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த தங்கமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் தங்கமணியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.