ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மின்மாற்றியிலிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பு காயில்கள் திருட்டு

அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை

News image
திருட்டு
Updated On :20 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

மணப்பாறை அடுத்த அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அழகாபுரி மின்மாற்றியில் வியாழக்கிழமை பிற்பகலில் மின்சாரம் இல்லை என நுகா்வோா் தகவல் தெரிவித்ததின்பேரில் மின்வாரிய கேங்மேன் அ. டேவிட்ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று, காயில்கள் திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தனா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை மின்வாரியம் சாா்பில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.