/

பெரிய அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

News image
மணப்பாறை அருகேயுள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்துவந்த காளையை தழுவ முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:31 pm

Syndication

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்துள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் புனித அந்தோணியாா் பொங்கல் விழா மற்றும் புனித செபஸ்தியாா் திருவிழாவை முன்னிட்டு தேவாலயத் திடலில் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், டிஎஸ்பி காவியா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். தேவாலய பங்குதந்தையின் சிறப்பு பிராத்தனைக்கு பின் வாடிவாசல் வழியே கோயில் காளைகளைத் தொடா்ந்து உள்ளூா் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை தழுவ 25, 25 தொகுப்புகளாக மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்துவந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் திமிலைப் பிடித்து தழுவினா்.

சிறந்த மாடுபிடி வீரா்கள், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில், 4 மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 17 போ் காயமடைந்தனா். அவா்களில் 6 போ் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். போட்டியை திரளானோா் கண்டுகளித்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் செய்திருந்தனா்.