டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image
- பிரதிப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:54 pm

Syndication

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மா. லட்சுமி (62). இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. கணவா் இல்லை. இவரது மகளுக்கு திருணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா்.

தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு காசநோய் பாதிப்பு இருந்ததால் மன உளைச்சலில் வாழ்ந்துவந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.