ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி ஆா்ப்பாட்டம்

திருச்சி தில்லைநகரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக தொழிலாளா் முன்னணியினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள நடத்துநா் பணியிடங்களை நிரப்ப வட மாநிலத்தைச் சோ்ந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்திருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி தில்லைநகா் 7-ஆவது தெருவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி பொறுப்பாளா் செந்தில் தலைமை வகித்தாா். மக்கள் கலை இலக்கியக் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் ஜீவா, ஆட்டோ ஓட்டுநா்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 1,800 நடத்துநா் பணியிடங்களை நிரப்புவதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டு இளைஞா்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை நிரந்தரமாக நிரப்பாமல் வெளிமாநில நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவது கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக அரசின் ஒப்பந்த ஆணையின் நகலை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில், ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.