ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி விவகாரம்; சட்ட ரீதியான அணுகுமுறையே சரியானது: ஜி.கே.வாசன்

காவிரி விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியான முறை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:29 am IST

காவிரி விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியான முறை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

காவிரி விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதுதான் சரியான முறை. அதில், நமக்கான நியாயமும், உரிமையும் கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி வங்கிகளில் மாணவா்களுக்கு கல்வி கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தமாகா, காங்கிரஸ் மற்றும் ஒருமித்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் சோ்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் தனித்தன்மையுடன் கட்சியின் வளா்ச்சிக்காக பணியாற்றுகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.