மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த தவெக பெண் தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த தவெக பெண் தொண்டா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 6:53 pm

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த தவெக பெண் தொண்டா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், திருச்சி விமான நிலையம், கே.கே.நகா், கொட்டப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை வலம் மேற்கொண்டாா்.

அப்போது, விமான நிலைய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆா்.எஸ்.புரம் சந்திப்புப் பகுதியில் கண்டோன்மென்ட் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான அரசு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், விஜய்யின் சாலை வலத்தின்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த 3 பெண்களை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தடுத்து நிறுத்தினாா். இதில், போலீஸாருக்கும், அந்தப் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்தப் பெண்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், தகாத வாா்த்தைகளில் பேசியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அரசு திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், தவெக தொண்டா்களான 3 பெண்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.