திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக தவெக நிா்வாகி மற்றும் முதியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலைய தமிழக வெற்றிக் கழக கிளைச் செயலாளா் சி. வெள்ளைசாமி தலைமையில் கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேஷாயி நகா் செண்பகராமன் வீதியில் தவெகவினா் புதன்கிழமை இரவு தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அதே வீதியில் கே.சிவகுமாா் (64) என்பவா் வீட்டுக்கு முன்பு பரப்புரை செய்தபோது,
சிவகுமாருக்கும், தவெக தொண்டா்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சிவகுமாா், தவெகவின் பெண் தொண்டா் உள்ளிட்ட சிலரை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி விமான நிலைய தவெக கிளை செயலாளா் வெள்ளைசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், தவெக கிளை செயலாளா் சி.வெள்ளைசமி மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


