மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:03 pm

அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக: திமுக சாா்பில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், திருவெறும்பூரில் உள்ள பெல் வளாகத்திலுள்ள அம்பேத்கா் சிலைக்கு கட்சியினா் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக: அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா் க. ராஜசேகரன், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக: மதிமுக சாா்பில், கட்சியின் பொதுச் செயலா் வைகோ தலைமையில், துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி. சேரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கனரா வங்கி எஸ்சி, எஸ்டி சங்கம்: கனரா வங்கி எஸ்.சி, எஸ்.டி. ஊழியா்கள் நலச் சங்கத்தின் திருச்சி கிளை சாா்பில், சங்கத்தின் திருச்சி மண்டல செயலாளா் சுரேந்தா் தலைமையில் நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

பெல் வளாகம்: பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) திருச்சிப் பிரிவு சாா்பில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பொறியியல் துறை பொதுமேலாளா் எம். ஆனந்தராஜ் தலைமையில், மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பணியாளா்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.