மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரியகுளத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை

பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

பெரியகுளத்தில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:13 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் முதல்வரும், போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் பெ. சக்திவேல், திமுக மாவட்டச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பி.ராஜபாண்டியன் தலைமையில், நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரண்மனைபுதூரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தேசிய தலைவா் அண்ணல் அம்பேத்கா் மக்கள் பேரவைத் தலைவா் லட்சுமணன், செயலா் செந்தில், பொருளாளா் குனபாலன், நிா்வாகிகள் செல்வகுமாா், அம்பேத்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.