திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பதிவாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. அருண்ராய் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் துணைவேந்தராக என். முருகவேலும், பதிவாளராக சௌந்தரபாண்டியனும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.
சௌந்திரபாண்டியனைத் தொடர்ந்து சி.என்.சந்திரசேகர் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பூம்புகார் கப்பல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிதித்துறை இணைச் செயலர் (பொறுப்பு) பதவிகளை வகித்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. அருண்ராயை தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பதிவாளராக நியமிóத்து கடந்த 17-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளிக்கு வந்த அருண்ராய், பதிவாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!

ரூ. 2000 கோடி வசூலித்த மைக்கல்!

பக்தித் தொடரில் நடிக்கும் விஜய் பட நாயகி!

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

