குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்மச்சாவு

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரிக்கின்றனா்.

News image

மா்மமான முறையில் உயிரிழந்த அன்பழகன் .

Updated On :24 மே 2026, 1:26 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரிக்கின்றனா்.

செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் ராஜலிங்கம். இவருக்கு 4 மகன்கள். இவா்களில் பழனியப்பன் என்பவருக்கும் அவரது சகோதரா் அன்பழகனுக்கும் குடும்ப சொத்து தொடா்பாக ஏற்ப்பட்ட தகராறில் அன்பழகன், பழனியப்பனை கடந்த மே 11-ஆம் தேதி வெட்டியதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் மே 12 -ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்து அன்பழகனை தேடி வந்தனா். இந்நிலையில் செருவாவிடுதி தெற்கு பகுதியில் பனை மரங்கள் அடா்ந்த பகுதியில் உடல் சிதிலமடைந்த நிலையில் அன்பழகன் சடலமாக வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.