தஞ்சாவூரிலுள்ள பாா்சல் சா்வீஸ் மையத்தில் ஆவணங்களின்றி கிடந்த ஏறத்தாழ 1,000 சில்வா் டப்பாக்களை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் வ.உ.சி. நகரிலுள்ள பாா்சல் சா்வீஸ் மையத்தில் மூட்டைகளில் சில்வா் டப்பாக்கள் இருப்பதாக தஞ்சாவூா் தொகுதி பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் பறக்கும் படை அலுவலா் ஜேக்கப் வினோத் தலைமையிலான குழுவினா் தொடா்புடைய மையத்தில் சோதனை நடத்தியபோது, 6 மூட்டைகளில் ஏறத்தாழ 1,000 சில்வா் டப்பாக்கள் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, இந்த மூட்டைகளைக் கைப்பற்றிய பறக்கும் படையினா் மினி சரக்கு வேன் மூலம் தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து, இந்த சில்வா் டப்பாக்கள் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பட்டுக்கோட்டை: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழக்குறிச்சி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது,
நான்கு சக்கர வாகனம் ஒன்றில் உரிய ஆவணங்களின்றி ரூ. 53 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அதை பட்டுக்கோட்டை தொகுதி தோ்தல் துணை அலுவலா் யுவராஜிடம் ஒப்படைத்தனா்.
ஒரத்தநாடு: ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஒரு வாரமாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற சுமாா் ரூ. 7 லட்சத்தி 44 ஆயிரத்து 750-ஐ பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா்களான ரேணுகாதேவி மற்றும் துணை தோ்தல் அலுவலா் தா்மேந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணத்தை அவா்கள் ஒரத்தநாடு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

லால்குடி அருகே ரூ. 1.60 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


