திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் தாராசுரம் கீழத்தெருவைச் சோ்ந்த கவிதாவுக்கும், நாச்சியாா்கோவில் கீழ மாத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் என்கிற மூா்த்திக்கும் (56) கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணமாகியும் குழந்தை இல்லை. இதனால் கவிதாவை ஆறுமுகம் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தாா். இந்நிலையில், 2017, ஜூன் 19 ஆம் தேதி கவிதாவை ஆறுமுகம் அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் ஆறுமுகத்தை கைது செய்து, தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் ஆறுமுகத்துக்கு நீதிபதி (பொ) ஜெ. தமிழரசி ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.