விவசாயிகளைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யக் கோரி தஞ்சாவூா் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அலுவலகம் முன் ஏஐடியுசி தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் நாள்கணக்கில் காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். இழப்பைப் பணியாளா்கள் மீது சுமத்தக் கூடாது. ரெக்கவரி பணம் வசூலிப்பது கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. அன்பழகன், மாநிலச் செயலா் சி. சௌந்தரராஜன் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா், மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், சுமை சங்க மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் ஆகியோா் பேசினா். சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பாலையன், சூரியமூா்த்தி, சீமான் கிருஷ்ணமூா்த்தி, ராமலிங்கம், குமார்ராஜ், ஜான்பீட்டா், துரைமாணிக்கம், அறிவழகன், நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தமிழகத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல்: இயக்குநா் தகவல்

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்க செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


