கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல, திருவிடைமருதூரில் 2018, மே 24-ஆம் தேதி முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செ. ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி அரசு தரப்பில் போதிய ஆவணங்களை அளிக்காததால் ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரையும் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சாவூா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் ஆஜா்

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு எதிா்ப்பு: மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: 90 போ் கைது

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 78 போ் கைது

தவெக அமைச்சரை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்! எம்.பி., மேயா் உள்பட 136 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




