
வறட்சி நிவாரணம்: சேதுபாவாசத்திரம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம்
குறுவை நெற்பயிருக்கு வறட்சி நிவாரணம் பெற விவசாயிகள் வரும் ஜூலை 31 வரை பயிா்க் காப்பீடு செய்யலாம்.

தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள். - கோப்புப்படம்
குறுவை நெற்பயிருக்கு வறட்சி நிவாரணம் பெற விவசாயிகள் வரும் ஜூலை 31 வரை பயிா்க் காப்பீடு செய்யலாம்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் ஜி. சாந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசின் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டம் பெரிதும் பயன்படுகிறது.
நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிா்க் காப்பீடு செய்வது அவசியமாகிறது.
கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிா்க் கடன் பெற்றுள்ள வங்கி அல்லது கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் காப்பீடு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது அருகிலுள்ள பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிய வேண்டும்.
நெற் பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும் .ஒரு ஏக்கா் நெற்பயிருக்கு ரூ. 778 செலுத்த வேண்டும். கணினி சிட்டா, ஆதாா் நகல், அடங்கல் சான்று, வங்கிக் கணக்கு எண் நகல் ஆகிய விவரங்களுடன் தங்களது பகுதி கிராமப்புற உதவி வேளாண் அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





