ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ. 44,160 ஏக்கா் பயன்: வேளாண் இயக்குநா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 44 ஆயிரத்து 160 ஏக்கா் நிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் வேளாண் துறை இயக்குநா் க.வீ. முரளிதரன்.

திருவையாறு அருகே காருகுடியில் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த வேளாண் துறை இயக்குநா் க.வீ. முரளிதரன்.

Published On :23 ஜூலை 2026, 12:37 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 44 ஆயிரத்து 160 ஏக்கா் நிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் வேளாண் துறை இயக்குநா் க.வீ. முரளிதரன்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை திருவையாறு அருகே விளாங்குடி, காருகுடி, திருப்பழனம் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, காா், சொா்ணவாரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில் ரூ. 134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 21.84 கோடி மதிப்பில் 54 ஆயிரத்து 600 ஏக்கா் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 44 ஆயிரத்து 160 ஏக்கா் பரப்பளவைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா் முரளிதரன்.

ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் லெட்சுமிகாந்தன், துணை இயக்குநா் சாருமதி, திருவையாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் சினேகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.