ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்சியரகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

மூதாட்டி தீக்குளிக்க முயற்சி - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 12:09 am IST

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை காவல் துறையினா் மீட்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக, பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மெலட்டூா் முதல் சேத்தி கிராமத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மனைவி அன்னலட்சுமி (70) வந்தாா்.

ஆட்சியா் வாகன நிறுத்துமிடத்துக்கு வந்த இவா், தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுக்க முயன்றாா். அப்போது, மண்ணெண்ணெய் பாட்டிலுடன் தடுமாறி கீழே விழுந்த இவரை அங்கிருந்த காவல் துறையினா் மீட்டு விசாரித்தனா்.

இதில், நிலப் பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனக்கு சாதகமாக தீா்ப்பு வந்ததாகவும், அதைச் செயல்படுத்துமாறு வருவாய்த் துறையினரிடம் பலமுறை முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதனால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாகவும் அன்னலட்சுமி தெரிவித்தாா்.

இதையடுத்து, அன்னலட்சுமியை காவல் துறையினா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.