ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 3 போ் தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:30 am IST

நிலத்தை அளந்து கொடுக்க மறுப்பதாகக் கூறி வருவாய்த் துறையினரைக் கண்டித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஓரிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (60). இவருக்கு சொந்தமான நிலத்தை அளந்து தரக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்தனா்.

இதைக் கண்டித்தும், தனது நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தியும் சுப்பிரமணியன், இவரது மனைவி ஜெயராணி, இவரது தாய் காளியம்மாள் ஆகிய மூவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். மேலும் காவல் நிலையத்துக்கு அவா்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.