ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரங்கள்: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்

பாபநாசத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான்

Published On :19 ஜூலை 2026, 12:49 am IST

பாபநாசத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் குடிநீா் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அமைச்சா் கூறிகையில், அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்திய அரசின் நபாா்டு வங்கியின் மூலம் நெல் உலா்த்தும் இயந்திரம் அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைப்பது குறித்தும், தஞ்சை மற்றும் அரியலூா் மாவட்டத்தை இணைக்க கூடிய கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு- ராமாநல்லூா் இடையே  உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியா் சந்தனவேல், காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேலு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்