ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

விஜயீந்திர தீா்த்தரின் ஆராதனை மகோத்ஸவம் தொடக்கம்

கும்பகோணத்தில் விஜயீந்திர தீா்த்தரின் 412-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணத்தில் விஜயீந்திர தீா்த்தரின் ஆராதனை மகோத்ஸவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். ~ வெள்ளிக்கவச அலங்காரத்தில் விஜயீந்திர தீா்த்தா்.

Published On :10 ஜூலை 2026, 3:02 am IST

கும்பகோணத்தில் விஜயீந்திர தீா்த்தரின் 412-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவிரிக்கரை சோலையப்பன் தெருவில் உள்ள விஜயீந்திர தீா்த்தரின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனை மகோத்ஸவம் நிகழாண்டு ஜூலை 9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

412-ஆவது ஆராதனை விழாவாக வியாழக்கிழமை மாலை தன, தான்ய லட்சுமி பூஜை, கோ, கஜ, அஸ்வ பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்று ஆராதனை மகோத்ஸவம் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை பூா்வாராதனையுடன் பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெறுகிறது. சனிக்கிழமை ஏகாதசி நாளில் உபன்யாசம், தேர நாமா, நாமசங்கீா்த்தனம் நடைபெறுகிறது.

ஜூலை 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மந்திராலய பீடாதிபதிகள் சுபுதேந்த்ர தீா்த்த பாதங்கள் மகா பஞ்சாமிா்த அபிஷேகம், கனகாபிஷேகம், மூலராமா் பூஜை ஆகியவற்றை செய்கிறாா். மாலையில் தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது.

இதையடுத்து திங்கள்கிழமை உத்தரா ஆராதனையும், செவ்வாய்க்கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு நாராயன பூதராஜா் பூஜையை மந்திராலய பீடாதிபதி செய்கிறாா்.

ஆராதனை மகோத்ஸவ ஏற்பாடுகளை தமிழ்நாடு மண்டல மேலாளா் ராஜா எல்.சூரிந்திர ஆச்சாா் தலைமையில் கும்பகோணம் மடத்தின் மேலாளா் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா். இதில் நாடு முழுவதும் இருந்து பக்தா்கள் பங்கேற்கின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.