ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் இயக்கம்

கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு வியாழக்கிழமை 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு அனுப்புவதற்காக வியாழக்கிழமை சரக்கு ரயிலில் நெல் மூட்டைகளை ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு வியாழக்கிழமை 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டப் பகுதிகளான பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் பகுதிகளில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குளில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்திருந்தது. இந்த நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி நெல் கொள்முதல் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்பேரில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி சேலத்துக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளும், ஆக.7-இல் திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளும் இயக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை 116 லாரிகளில் 2 ஆயிரம் டன் சாதா ரகம் நெல்மூட்டைகள் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து சரக்கு ரயில்களில் நெல்மூட்டைகளை ஏற்றி திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, தரக்கட்டுப்பாட்டு மேலாளா் சக்தி, தர ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் திருப்பூருக்கு அனுப்பப்பட்ட நெல் மணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.