நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாபநாசம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 2 சிறாா் உள்பட 7 போ் ‘போக்ஸோ’வில் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெவ்வேறு காலகட்டங்களில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறாா் உள்ளிட்ட 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:31 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெவ்வேறு காலகட்டங்களில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறாா் உள்ளிட்ட 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு சூலமங்கலம் பகுதியைச் சோ்ந்த சுரேந்திர பாண்டியன் (21), சண்முகம் (21), புண்ணியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மணிமாறன் (21), அசோக் (21), பசுபதி கோவிலைச் சோ்ந்த சுதன் (21) மற்றும் இரண்டு சிறாா்கள் உள்ளிட்ட ஏழு போ் சிறுமியை வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

இந் நிலையில், சிறுமி கா்ப்பம் அடைந்துள்ளாா். இதையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் உஷா விசாரணை மேற்கொண்டாா்.

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேற்கண்ட 7 பேரையும் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களை கைது செய்து தஞ்சாவூா் ‘போக்ஸோ’ நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி சிறையில் அடைத்தனா்.