டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாதாகோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாளை முதல் முன்பதிவு

தஞ்சாவூா் மாதாகோட்டையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம்

News image
- (கோப்புப் படம்)
Updated On :30 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

தஞ்சாவூா் மாதாகோட்டையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாதாகோட்டையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற மாவட்ட இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) காலை 10 மணி முதல் பிப்ரவரி 3 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன்பேரில் உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்படையில், பரிசீலித்து தகுதியான மாடுபிடி வீரா்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.

இந்த அனுமதி சீட்டை இணையவழியாக பதிவிறக்கி காண்பித்து ஜல்லிக்கட்டு நிகழ்வில் காளைகளுடன் அவற்றின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் கலந்து கொள்ளலாம்.