டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேராவூரணி அருகே விபத்து: விவசாயி பலி

பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நின்ற லாரி மீது மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்ற விவசாயி நின்ற லாரி மீது மோதி உயிரிழந்தாா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஸ்ரீதா் (52). இவா்  நெடுவாசலில் நடந்த விசேஷசத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்றபோது  செங்கமங்கலம் அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் எதிா்பாராதவிதமாக மோதினாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா் தஞ்சை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பேராவூரணி போலீஸாா் அவரது உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , லாரி ஓட்டுநா் கண்ணன் (40) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.