நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

589 ஊராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கலிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 589 ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பெ.க. அருண்மொழி, வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, உதவி இயக்குநா் பி. கோகுலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பொதுமக்கள் சுய உதவிக் குழுவினா் சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

மேலும், கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து குக்கிராமங்களில் ஜனவரி 12, 13 ஆம் தேதிகளில் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.