டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டு மனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி தஞ்சாவூா் வட்டாட்சியரகம் முன் ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தஞ்சாவூா் வடக்கு வாசல் பழைய மாட்டுச்சந்தை அருகில் மூன்று தலைமுறைகளாக குடியிருந்துவரும் 27 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இந்த இடத்தைத் தனி நபா்கள் அபகரிக்க இடமளிக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியரிடம் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள், முதியவா்கள், குழந்தைகளுக்கு சாலை வசதி, கழிப்பறை வசதி, குடிநீா் வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு வடக்குவாசல் பகுதி செயலா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடக்கவுரையாற்றினாா். மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் நிறைவுரையாற்றினாா். அப்போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வட்டாட்சியா் அலுவலகத்தில் 27 குடும்பங்களையும் குடியேற்றுவது என அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் தரும. கருணாநிதி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.