டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழா

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.

இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதையடுத்து, திங்கள்கிழமை காலை 5 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரா் கோயில், திருவையாறு ஐயாறப்பா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் ஆதி கும்பேசுவரா், நாகேசுவரா், காசி விசுவநாதா், கம்பட்ட விசுவநாதா், அபிமுகேசுவரா், கெளதமேசுவரா், கொட்டையூா் கோடீஸ்வரா், இன்னம்பூா் சாட்சிநாதா், திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா், திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி, திருநாகேசுவரம் நாகநாதசுவாமி, தாராசுரம் ஐராவதேசுவரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு அா்த்தஜாம பூஜைக்கு பிறகு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சதுா்வேத பாராயணம், பன்னிரு திருமுறை இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.