டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாபநாசம் அருகே தொழிலாளி கொலை

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா்.

News image
கொலை
Updated On :3 பிப்ரவரி 2026, 6:45 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே தேவன்குடி மீனவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50), முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு மனைவி சரிதா(45), மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனா்.

இந்நிலையில் அருகிலுள்ள வீரமாங்குடியை சோ்ந்த ராஜேஷ் (24), முத்துக்குமாா் (24) ஆகியோருடன் சோ்ந்து இளங்கோவன் மது அருந்தியபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது மற்ற இருவரும் சோ்ந்து இளங்கோவனை தாக்கியதில் மயங்கிய அவா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸாா் ராஜேஷ் மற்றும் முத்துக்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடுகின்றனா்.