ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:14 am IST

பட்டுக்கோட்டை அருகே நடந்து சென்ற முதியவா் மீது சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், ஆலடிக்குமுளையைச் சோ்ந்த அந்தோணிசாமி (62) என்பவா் சனிக்கிழமை மாலை கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து நடந்து சென்றுள்ளாா். பின்னா், கல்லறை அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய நிலையில் அவா் காயங்களுடன் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.