ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குண்டடம் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

குண்டடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:14 am IST

குண்டடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

குண்டடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னாவரம் பிரிவு அருகே, தாராபுரம்-கோவை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், குண்டடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், குண்டடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண் சாலை விபத்தில் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா என்பது குறித்தும், அந்தப் பெண் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.